எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Wednesday, May 26, 2010

விவரம் அறியும் ஆர்வம்

நம்முடைய வாசகர், சகபதிவர்,  திரு விஜய் அவர்கள் அவருடைய மூன்று வலைத்தளங்களில் ஒன்றாகிய அகசூல்    என்னும் தளத்தில் மரங்கள் பற்றியும், இயற்கை உரங்கள் பற்றியும் பல பயனுள்ள தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

அவரிடம் நான் கேட்க நினைத்த கேள்வி இது:
நான் (யாரு என்றெல்லாம் வாசகர்கள் ஆராய்ச்சி செய்ய முற்படவேண்டாம். நான் யார் என்பது எனக்கே தெரியாத போது நீங்க மட்டும் கண்டுபிடிக்க முடியுமா என்ன!) இருக்கின்ற பகுத்தியில் ஒரு வகை மரம் நிறைய இருக்கின்றன. அந்த மரத்தின் இலையையும், காயையும் இங்கே படம் கொடுத்துள்ளேன். 

இந்த வகை மரத்திற்கு என்ன பெயர், இவற்றின் இலைக்கோ அல்லது காய்க்கோ ஏதேனும் சிறப்பு உபயோகங்கள் உண்டா என்பது போன்ற விவரங்கள் உங்களிடம் இருந்தால், அதை தயவு கூர்ந்து எனக்கு இங்கே பின்னூட்டமாகத் தெரியப் படுத்தவும். 

மற்ற வாசகர்களும், அவர்களுக்குத் தெரிந்த, இந்த மரம் பற்றிய விவரங்களை இங்கே பதியலாம்.  (ஹலோ குரோம்பேட்டை! குறும்பு பின்னூட்டம் எதுவும் இந்த பதிவுக்கு வேண்டாமே ப்ளீஸ்! இது ரொம்ப சீரியஸ் பதிவு ஆமாம்.)
இது இலை. 
இது காய் 

10 comments:

 1. எனக்குத்தெரியாதுங்க...

  ReplyDelete
 2. புங்க மரம் (pongamia)

  Best Air purifier

  மூலிகை வளம் குப்புசாமி ஐயாவின் லிங்க்
  http://mooligaivazam-kuppusamy.blogspot.com/2008/08/blog-post_13.html

  விஜய்

  ReplyDelete
 3. குழந்தைகளுக்கு இடுப்பில் கட்டுவாங்க, ஒரு வகை மருத்துவ மரம், புங்கங்காய் என்று என் கணவரின் துணையோடு கண்டு பிடிச்சேன். விஜய் என்பவரும் அதே சொல்லி இருக்கிறார் போல!

  ReplyDelete
 4. Vishnu sings very well.
  Nalla kuralvalam. congrats.

  ReplyDelete
 5. சீரியஸ் பதிவா... பயமா இருக்கே? பல்லாவரம் பக்கம் போனா காடா வளந்து கெடக்கும். (என்ன செய்யப் போறீங்க புங்கை மரத்தை வச்சுக்கிட்டு? நைசா எங்க காதிலயும் போட்டு வைங்க.)

  ReplyDelete
 6. Thanks for the url Vijay. Very impressive.
  சுட்டிக்கு நன்றி விஜய். இத்தனை மூலிகை விவரமா! அசந்து போனேன்.

  குரோம்பேட்டையில் குடியிருந்த நாளில் எங்கள் வீட்டுச் சொந்தக்காரக் கிழவி புங்கை இலையை அரைத்து முதுகிலும் கழுத்திலும் அப்பிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். வெயிலுக்கு (அக்கி?) இதம் என்பார்கள். கிழவி அந்தப் பக்கம் வந்தால் இந்தப் பக்கம் ஓடுவோம். நாற்றம் சகிக்காது. இலை நாற்றமா என்ன தெரியாது, of course.

  ReplyDelete
 7. எங்கள்May 26, 2010 at 7:06 PM

  நன்றி விஜய். உங்கள் தகவல்களுக்கு. பயனுள்ள பல தகவல்கள் உங்கள் தளத்தில் இருப்பது கண்டு, அவை நம் வாசகர்களுக்கும் உபயோகமாகவேண்டும் என்ற ஆர்வத்துடந்தான் இந்த பதிவும் சுட்டியும் அளித்தோம்.
  வல்லிசிம்ஹனுக்கு விஷ்ணு நன்றி சொல்கிறார். உபரி தகவல்கள் அளித்த கீதா சாம்பசிவம், அப்பாதுரை ஆகியோருக்கு எங்கள் நன்றி.
  விஜய் சாரிடம் ஒரு உபரிக் கேள்வி. எங்கள் ஊரில் சிறுவர் சிறுமியர் அரைஞான் கயிற்றில் கட்டப்படும் (அரசிலை?) புங்காஙகாய் இதய வடிவில் இருக்குமே - இந்தக் காய் அந்த வடிவத்தில் இல்லையே?

  ReplyDelete
 8. குரோம்பேட்டைக் குறும்பன்May 26, 2010 at 9:14 PM

  கேள்வி கேட்டு, பதிலும் வந்தாச்சு. இப்போ நான் உள்ளே வரலாமா?
  புங்காங்காய்கள் வைத்து ஏதாவது தாயத்து வியாபாரம் பண்ணப் போறீங்களா? அப்படிப் பண்ணுவதாக இருந்தால் என்னையும் பார்ட்னராக சேர்த்துக்கொள்ளுங்கள். எனக்குச் சொந்தமா ஒரு புங்கமரம் இருக்கு.

  ReplyDelete
 9. புங்க மரத்தில் நிறைய வகைகள் இருக்கிறது

  நீங்கள் குறிப்பிடும் இதய வடிவம் இந்த (Pongamia velutina) பாமிலி என்று நினைக்கிறேன்

  கூடிய விரைவில் தெளிவு படுத்துகிறேன். (படம் ஒன்று மெயிலில் அனுப்பி உள்ளேன்)

  விஜய்

  ReplyDelete