வியாழன், 7 அக்டோபர், 2010

யார் இவர்? என்ன புகழ்?

இது ஒருவருடைய புகைப்படம்:
   
கீழே உள்ளது, இவரையே ஒருவர் வரைந்துள்ள படம். 
  
எங்கள் கேள்விகள்: 

1) படத்தில் இருப்பவர் யார்? 

2) வரைந்தவர், எங்கள் குடும்பத்து உறுப்பினர்களில் ஒருவர். வரைந்தவருக்கு என்ன வயது இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்? 

க்ளூ 1: படத்தில் இருப்பவர், நால்வரில் ஒருவர். எந்த நால்வர்? SET BALE என்பதை மாற்றி அமைத்து, இசையோடு விடை கண்டுபிடியுங்கள். 

க்ளூ 2: வரைந்தவர், வரையப்பட்டவர் பிறந்த ஐம்பத்தேழு வருடங்களுக்குப் பிறகு பிறந்தவர். வரையப்பட்டவர் பிறந்த தேதி அக்டோபர் ஒன்பது. 

SPS கேள்வி: வரையப்பட்டவ்ரைப் பற்றி மர்மமான தகவல் ஒன்று உள்ளது. அது என்ன என்று எழுதுபவருக்கு, சிறப்புப் பாராட்டு உண்டு.