எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Saturday, March 17, 2012

மியாவ்! மியாவ்!!

         
கோடை வந்துவிட்டது. 


குழந்தைகளுக்குக் கோடை விடுமுறையும் வந்திருக்கும் அல்லது விரைவில் வந்துவிடும். 


குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மீண்டும் படம் வரையும் ஆர்வத்தைக் கிளறிவிடலாம் என்று நினைத்ததால், இந்தப் பதிவு. 
              
ஒரு A5 அளவு பேப்பர் எடுத்துக் கொள்ளவும். (210 mm X 149 mm - என்று நினைக்கின்றோம். சரிதானா ஹுசைனம்மா?) 


அதில் கீழ்க்கண்ட வகையில், படிப்படியாக பென்சில் ஸ்கெட்ச் செய்யவும். 


இறுதியில் வருகின்ற உருவத்தை, தேவையானால், வர்ணம் அடித்து அல்லது கருப்பு வெள்ளைப் படமாக, JPG or BMP ஃபார்மட்டில், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். 


படம் வரையத் தெரியாதவர்கள் பூனை பற்றிய கவிதை, கதை, விவரங்கள், வியாசம் - என்று எதையாவது பதியுங்கள், அனுப்புங்கள். 


பதிவிடுகின்றோம் உங்கள் கலக்கல்களை / கிறுக்கல்களை! 

தயக்கமில்லாம அனுப்புங்க. 
                           

7 comments:

Madhavan Srinivasagopalan said...

கடைசியா கீழ இருக்குற படத்த பிரின்ட் எடுத்து அனுப்பினாலும் நீங்க அத வெளியிடுவீங்களா ?

Madhavan Srinivasagopalan said...

மியாவ்! மியாவ் பூனை,
வீட்டைச் சுத்தும் பூனை..!!
ச்சூ போணு வெரட்ட மாட்டேன்
அப்பா மேல ஆணை..

எங்கள் ப்ளாக் said...

மாதவன்! நெனச்சேன் இந்த மாதிரி ஏதாவது ஏடா கூடமா கேட்பீங்கன்னு! வருகின்ற படத்துக்கும், கடைசி படத்துக்கும் ஆறு வித்தியாசங்கள் பார்த்துத்தான் பப்ளிஷ் செய்வோம்!

கவிதை சூப்பர்!

Madhavan Srinivasagopalan said...

ஆறு வித்தியாசம் இருந்துச்சின்னா.... அப்ப நீங்க சொன்னபடி பூனைய வரையலன்னு அர்த்தம்தான..!

அப்படியே ஆறு வித்தியாசம் இருக்கனுமின்னா.. இதென்ன பெரிய விஷயம்.. பூனையோட உடம்புல சில புள்ளிகள் ஏக்ச்ற்றாவா செத்திட்டாப் போச்சு.. அப்புறம் அத ஜெராக்ஸ் எடுத்து ஸ்கேன் பண்ணி அனுப்பிடுவோமே

எங்கள் ப்ளாக் said...

படத்தை முதலில் அனுப்புங்க மாதவன் - ஒரே பில்ட் அப் கொடுத்துகிட்டே போறீங்க!

கணேஷ் said...

ஸ்கூல் படிக்கறப்பவே... நான் யானை வரைஞ்சா, பன்னிக்குட்டி மாதிரி இருக்குன்னு சுந்தரம் வாத்தியார் தலையில குட்டுவார். இப்ப பூனை வரைஞ்சா... ‘எங்கள் ப்ளாக்’கிட்ட குட்டு வாங்க நான் தயாரா இல்லைப்பா... எஸ்கேப்!

Madhavan Srinivasagopalan said...

//படத்தை முதலில் அனுப்புங்க மாதவன் - ஒரே பில்ட் அப் கொடுத்துகிட்டே போறீங்க! //

எது ஈசியோ அதத்தான மொதல்ல செய்வோம்..