எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Saturday, November 24, 2012

பொடி விஷயம்!


*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. 

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை 
நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருங்கை விதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது. 

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாழை  பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.  

(மின் அஞ்சல் அனுப்பியவர்: அனந்தநாராயணன், அசோக் லேலண்டு. ஆனால் அவருக்கு அனுப்பியவர் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை! )
                

19 comments:

 1. பொடிவைத்து
  பொங்கும்
  பொடி விஷயம் ....

  ReplyDelete
 2. எனக்குத் தெரிந்த ஒரே ஒரு பவுடர் கோகுல் சாண்டல் ... முக அழகுக்கு சிறந்தது

  ReplyDelete
 3. மிக ம்க நன்றி. கடுக்காய்த் தோலைப் பொடி செய்து வாயில் அடக்கிக் கொள்ள இருமல் குணமாகும்.

  ReplyDelete
 4. பயனுள்ள குறிப்புகள்..

  ReplyDelete
 5. பயனுள்ள குறிப்புகள்.....

  on the lighter side, ”பொடி வைச்சு பேசறது” என்று சொல்வார்களே, அது இந்த பொடிகளில் எது? :)

  ReplyDelete
 6. இது பொடி விசயம் அல்ல... அறிந்து கொள்ள வேண்டிய, சேமித்துக் கொள்ள வேண்டிய விசயம்(கள்)...

  நன்றி...

  ReplyDelete
 7. சிறப்பான தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 8. பயனுள்ள பொடித் தகவல்கள்...

  ReplyDelete
 9. பயனுள்ள தகவல்

  ongoing event: kids drawing contest - win cash prizes

  http://en-iniyaillam.blogspot.com/2012/11/kids-drawing-contest-win-cash-prizes.html

  ReplyDelete
 10. பயனுள்ள குறிப்புகள். super

  ReplyDelete
 11. பொடி விஷயம் அருமை. உடலுக்கு நலம் பயக்கும் குறிப்புகள்.

  ReplyDelete
 12. பயனுள்ள தகவல்... நன்றி...

  ReplyDelete
 13. சிறப்பான தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 14. நான் முதல் முறை வலைசரம் மூலமாக உங்கள் தளத்திற்கு வருகிறேன்.
  பொடி விஷயம் பிரம்மண்டாமாக இருக்கிறது.

  பகிவிற்கு நன்றி.
  ராஜி.

  ReplyDelete
 15. பொடி விசயங்கள் அருமை.
  நல்ல தகவல்கள்.
  (ஆனால் இங்கே கிடைக்காது - பிரான்ஸ்)
  நன்றி.

  ReplyDelete
 16. பயனுள்ள தேவையான குறிப்புகள் நல்ல பகிர்வு நன்றி
  உங்கள் வலைபூவுக்கு இபொழுதுதான் வருகிறேன் நான் புதியவள் வலைபூவுக்கு

  ReplyDelete

 17. வணக்கம்!

  பொடிவைத்துப் பேசுகின்ற புலவா் உள்ளார்!
  பொடிபோட்டுப் பேசுகின்ற அறிஞா் உள்ளார்!
  அடிவைத்து நடக்கின்ற பெண்கள் உள்ளார்!
  அடிவைத்து அளக்கின்ற பொய்யா் உள்ளார்!
  தடிவைத்து நடக்கின்ற கிழவா் உள்ளார்!
  தடிவைத்து அடிக்கின்ற தடியா் உள்ளார்!
  கொடிவைத்து மணக்கின்ற சோலை போன்று
  தமிழ்ச்சித்த நன்மருந்தைக் கொடுத்தீா்! வாழ்க!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு

  ReplyDelete
 18. இவ்வளவு நல்ல நல்ல பௌடர் கள் இருக்கின்றன என்று
  இத்தனை வருசமா தெரியாமலே நான்
  பான்ட்ஸ் பௌடரை உபயோகப்படுத்தறேனே. !!

  சுத்த மக்கு ஸார் நானு.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in

  ReplyDelete
 19. வணக்கம் சகோ! வலைச் சரத்தின் ஊடாக வந்தேன்.பொடிகள் நல்ல பயனுள்ள தகவல் ஆனால் எங்குகிடைக்கும் என்று தான் தெரியலை.மிக்க நன்றி! வாழத்துக்கள் ...!

  ReplyDelete