எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Monday, October 2, 2017

க க க போ 4 : நெல்லைத்தமிழன் ரெசிப்பி ! ஆரம்பம் சொல்வோம் மீதி என்ன?


அன்புடன்

"நெல்லைத்தமிழன்"


கீழே உள்ளதுதான் கதையின் ஆரம்பம். ‘வாசு, வானதி, சுவாமினாதன், வசுமதி’ என்ற பெயரை வேண்டுமானால் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். உறவு நீங்கள் விரும்பியபடி. ‘மொழி நடையையும் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் (உதாரணம்: ஐயா  போதும் நீங்க ஏன் இங்கன தனியா இருக்கீக. எம்மடகூட வந்துருங்க  போன்று). ஆனால் ஆரம்பம் அப்படியே இருக்கவேண்டும். உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு கதை எழுதி அனுப்புங்கள்.

கடமை

‘அப்பா.. போதும்பா நீங்க தனியா இங்க இருக்கறது.. எங்களோட வந்துடுங்க.’  வாசு அப்பாவிடம் இறைஞ்சினான்.

‘வேணாம்டா.  இங்கயே இருந்துட்டேன். இங்கயே போயிடறேன்டா. வானதியோட எப்போவும் தொடர்புல இருடா. அவளுக்கு உங்க அரவணைப்பு அவசியம்’, சுவாமினாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு கண்ணைமூடினார்.

வாசுவுக்கு அப்பாவை அந்த நிலையில் பார்ப்பது வருத்தமுறச் செய்தது. கண்ணில் நீர் வருவது அப்பாவுக்குப் பிடிக்காது என்று அடக்கிக்கொண்டான். வசுமதி அவன் கையைப் பிடித்துக்கொண்டாள்..


இனி நீங்கள் எழுதுவது...... 
               


25 comments:

 1. தொடரட்டும் வாழ்த்துகள்

  ReplyDelete
 2. ஓ... அடுத்த விருந்து ஆரம்பமா!...

  மகிழ்ச்சி..

  ReplyDelete
 3. நெ.த. கதைக்கரு கொடுத்திருக்காரா? சரியாப் போச்சு போங்க! :)

  ReplyDelete
  Replies
  1. அப்படீன்னா அர்த்தம் என்ன கீ.சா. மேடம்? போன கருவுக்கே இன்னொரு கதை பாதில இருக்கு.

   Delete
 4. ஆ!!! நெ த கதைக் கருவா!!! ம்ம் நெ த ம்ம்ம் எல்லாத்துலயும் புகுந்து கலக்குறீங்க போங்க!!! தொடருங்கள்...எழுதுங்கள்! எழுதுவோருக்கு வாழ்த்துகள்! என்னால் இப்போது எதுவும் தீர்மானிக்க முடியலை...கககபோ 4 வாசித்ததும் கதை மனதில் கதை தோன்றியது....ஆனால் எழுதணுமே!!! அதுக்கு சரியான தருணம் வேணுமே!...

  முந்தையதே பாதில இருக்கு...ஹும்...எழுத முடியுமா பார்க்கணும்...

  கீதா

  ReplyDelete
 5. நெல்லை தமிழன் ரெசிப்பியா ....வரேன் :) சீக்கிரம் எழுத முயல்கிறேன் ..#துவக்க வரிகள் பாசப் பிணைப்பை சொல்ற மாதிரி இருக்கு

  யோசிச்சிட்டு வரேன்

  ReplyDelete
 6. கதை கரு கொடுத்துட்டீங்க யோசிங்கனு சூப்பர் நிறைய க கு ஓடியவையை படிக்க முடியும்

  ReplyDelete
 7. >>>

  கடமை

  அப்பா.. போதும்பா நீங்க தனியா இங்க இருக்கறது.. எங்களோட வந்துடுங்க.. வாசு அப்பாவிடம் இறைஞ்சினான்.
  <<<

  கடமை - என்று மேலே சொல்லப்பட்டிருப்பது கதைக்கான தலைப்பா!?..

  அன்புடன் பதில் கூறவும்..

  ReplyDelete
  Replies
  1. துரை செல்வராஜ் சார்... கதைத் தலைப்பு எதுவானாலும் தீமுக்கு ஏத்தமாதிரி இருக்கலாம். நான் கடமை என்ற தலைப்பில் எழுத முயலப்போகிறேன்.

   Delete
 8. மற்றொன்றும் கேட்க நினைத்தேன்...கடமை என்பதுதான் தலைப்பா...இல்லை தலைப்பு அவரவர் வைப்பதா...

  ஓ இதை அடித்துவிட்டுப் பார்த்தால் துரை செல்வராஜு சகோவும் கேட்டிருக்கிறார்...

  கீதா

  ReplyDelete
 9. தொடருகிறவர்களுக்கு ஏதோ நம்மால் ஆன உதவி.

  கதையின் ஆரம்ப வரிகளைப் புரட்டிப் போட வேண்டுமானால், விட்ட இடத்திலிருந்து இப்படித் தொடரலாம்.

  "சரித்தான், போடா!" என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டார் சுவாமிநாதன், பொங்கிய ஆத்திரத்தில். மகன் வாசுவின் நடிப்பை அவர் அறிவார்.

  இருந்தாலும் மகள் வானதியை நினைத்து இந்த நேரத்திலும் அவர் மனம் மருகியது. அவள் புகுந்த வீட்டில் படும் துன்பம் அவரை வாட்டியது.

  தான் போய்விட்டாலும், வீட்டில் பிறந்த பெண் குழந்தைக்கு அண்ணன் துணை எப்பொழுதும் அவசியம் என்பதை நினைவு கொண்டவராய், "வானதிக்கு உங்க அன்பும், ஆதரவும் எப்பவும் அவசியம்டா. இது அப்பாவின் வேண்டுகோள்.. அதை உதாசீனம் பண்ணிவிடாதே!" என்று திக்கித் திணறிச் சொன்னார்.

  ReplyDelete
  Replies
  1. "சரித்தான் போடா"- இந்த வார்த்தையே வித்தியாசமான கதையைக் கொண்டுவந்துவிட்டது. நான் எண்ணியதற்கு அப்படியே ஆப்போசிட். அனுபவம்னா சும்மாவா?

   Delete
 10. ஆகா... கதை தயார்!.. எப்போது அனுப்பி வைக்க!?..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... இதுக்குன்னே தனி ஃபேக்டரி வச்சிருக்கீங்களா? Unlike Engalblog, இங்க கதை விரைவில் வெளியாகும், ரெண்டு நாள் கருத்துகள் வந்து பதிலும் எழுதியாச்சுனா, அடுத்தது வெளியிட்டுடுவாங்க. ஆரம்பித்துவையுங்கள்.

   Delete
 11. அனுப்பி விட்டேன்..

  kg gouthaman என்ற மின்னஞ்சலுக்கு வயலும் வாழ்வும் என்ற கதையை அனுப்பி விட்டேன்..

  வாழ்க நலம்..

  ReplyDelete
 12. சார்.... பயங்கர வேகம், முனைப்பு. வாழ்த்துக்கள். நீங்க உங்க ஜெ.. கவிதைக்கு பின்னூட்டம் பாக்கி வச்சிருக்கீங்க.

  ReplyDelete
 13. பயங்கர வேகமா!....

  எனக்கொன்றும் புரியவில்லை..
  அங்கிருந்து இன்னமும் நான் மீளவில்லை..

  ReplyDelete
  Replies
  1. Superfastஆ கதை எழுதியிருக்கீங்க. நான் வல்லிசிம்ஹன் அவர்கள் தன்னுடைய சமீபத்தைய அனுபவமாக ஒன்றைச் சொல்லியிருந்தார். அதில் எழுந்த எண்ணத்தில் கதை எழுத ஆரம்பித்துவிட்டேன். அப்படியே நாட்கள் நகர்ந்துவிட்டன (ஒரு மாதமாகிவிட்டது). கதை இன்னும் வடிவம் பெற்று வரவில்லை. ஆனால் நீங்கள் விரைவாக எழுதிவிட்டீர்கள். கதையையும் அங்கு படித்தேன். மிகுந்த மன நிறைவு. வாழ்த்துக்கள்.

   Delete
 14. கதை பட்டறை ரெடி . சகோ துரைசெல்வராஜூ அவர்கள் கதையை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

  நெல்லைத்தமிழன் ஆரம்பவரிகள் அருமை.

  ஜீவி சாரின் கதையின் தொடக்க வரி அருமை.
  எழுத போகிறவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. ஆவ்வ்வ்வ் இவ்ளோ விசயம் நடந்திருக்கா... இம்முறை கதைக்கருவுக்குச் சொந்தக்காரர் நெல்லைத்தமிழனோ?:) அப்போ அவரையே கதாநாயகனாகப் போட்டு ஆரம்பிச்சிடலாம் கதையை... இக்கருவுக்கு நிறைய கற்பனைகள் வருது... நான் ஏற்கனவே இப்படி ஒரு கதை எழுதியிருக்கிறேன்.. இது கொஞ்சம் வித்தியாசம்..

  ReplyDelete
 16. //வாசு, வானதி, சுவாமினாதன், வசுமதி’ என்ற பெயரை வேண்டுமானால் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். உறவு நீங்கள் விரும்பியபடி//

  பெயர்களை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டு உறவை நான் விரும்பியபடி மாற்றிக் கொண்டு ஓர் கதைக்கரு மனதில் உதயம் ஆகி இருக்கு! ஆனால் கனமான தீவிரமான கரு! இங்கே நெ.த. கொடுத்திருப்பதும் அப்படி ஓர் தீவிரமான கதைக்கருவே என்னும் எண்ணமும் தோன்றியது. எழுதப் பார்க்கிறேன். சரியா வந்தால் என் அதிர்ஷ்டம், கதை வெளியாகும். இல்லைனா உங்க அதிர்ஷ்டம்! கதை வராது! எப்படினு முடிவு பண்ணிக்கோங்க! :)

  ReplyDelete
  Replies
  1. சரியா வந்தால் என் அதிர்ஷ்டம்
   இல்லைனா உங்க அதிர்ஷ்டம்!


   கீதாக்கா ராக்ஸ்!

   Delete
  2. மீ ஆல்வேஸ்! @ஶ்ரீராம்! :)

   Delete
 17. நான் எழுதி விட்டேனே:)..

  http://gokisha.blogspot.com/2017/10/blog-post_5.html

  ReplyDelete