எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Tuesday, July 10, 2018

சு டோ கு

இது ஒரு புதிய கரு.

நீங்க எழுத வேண்டிய கதையின் கரு:
சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண்.(ஹி ஹி ! இது சுந்தரியின் அம்மா)

அதே போல, குணபதி அவனுடைய அம்மா அப்பாவுக்கு ஒரே பையன். மீதி காரெக்டர்கள் (தாத்தா, பாட்டி etc) அவர்கள் பெயர்கள் எல்லாம் உங்கள் கற்பனைக்கு.


              (குணபதியின் அம்மா, அப்பா)

கதைக் கரு என்ன என்றால், சுந்தரிக்கும், குணபதிக்கும் திருமண முயற்சி. பெண் பார்த்தல், சொஜ்ஜி, பஜ்ஜி சமாச்சாரம் எல்லாம் இல்லாமல், இரு வீட்டாரும் வேறு ஒரு முடிவு எடுக்கிறார்கள்.

ஒரு வாரம், சுந்தரி, குணபதியின் வீட்டிலும், அதே வாரத்தில், ( சு To கு வாரத்தில்) குணபதி, சுந்தரியின் வீட்டிலும் தங்கி அந்தந்த  வீட்டில் ஒரு அங்கத்தினராக இருந்து, தங்கள் வேலைகளைப் பார்ப்பது.

இருவீட்டாரின் பெரும்பான்மை அபிப்பிராயம்  ஓ கே என்றால், (அதாவது, தன் மகன் / மகளுக்கு ஏற்ற ஜோடி இவள் / இவன்தான் என்ற கருத்து ஒற்றுமை) ஏற்பட்டால் திருமணம் நடக்கும். இல்லையேல் வேண்டாம் என்று முடிவு எடுக்கப்படும்.சுந்தரிக்கும், குணபதிக்கும் கல்யாணமா, இல்லையா? கதையும் முடிவும் உங்கள் கைகளில்!


சிறுகதையோ, குறுந்தொடரோ என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள்.

Start music ! 

14 comments:

 1. முயற்சிப்போம்...

  ReplyDelete
 2. புதுமையான முயற்சி. பார்ப்போம்.

  ReplyDelete
 3. ////ஹி ஹி ! இது சுந்தரியின் அம்மா)////

  ஹா ஹா ஹா ஐ ரோட்டலி புரூட்டலி அக்றி வித் ஊஊஊஊ கெள அண்ணன் ஹா ஹா ஹா:)..

  ReplyDelete
 4. சூர்யா ஜோதிகா படம் ஒன்றில் இப்படி வருமே - of course காதலுக்காக இப்படி இருப்பார்கள். கதை எழுதப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. ரொம்ப சினிமாட்டிக்காக இருக்கிறதே

  ReplyDelete
 6. ஆஹா! இவ்வளவு அழகான மாமியாரா? அதற்காகவே சுந்தரி சரி என்று சொல்லி விடுவாள்.

  ReplyDelete
 7. சுந்தரி, குணபதி என்ன பெயர்கள் இவையெல்லாம்? கல்யாண வயதில் இருக்கும் பெண், பிள்ளைகளுக்கு இந்த மாதிரி பெயர்கள் இப்போது இருக்கிறதா? நாட்டாமை பெயரை மாத்து

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்!..
   நாட்டாமே!... பேரை மாத்துங்க!...

   Delete
  2. சு டோ கு சரியா வரணும் இல்லியா ! அதனால்தான் சுந்தரி & குணபதி. நீங்க வேணும்னா சுனந்தா, குருதத் என்று பெயர் வெச்சுக்குங்க!

   Delete
 8. //ஒரு வாரம், சுந்தரி, குணபதியின் வீட்டிலும், அதே வாரத்தில், ( சு To கு வாரத்தில்) குணபதி, சுந்தரியின் வீட்டிலும் தங்கி அந்தந்த வீட்டில் ஒரு அங்கத்தினராக இருந்து, தங்கள் வேலைகளைப் பார்ப்பது.//

  கதை கரு சினிமாவில் வருவது போல் இருக்கிறது.
  உண்மையில் இப்படி நடக்குமா?

  இனி வரும் காலத்தில் நடந்தாலும் நடக்கும்.
  கதை எழுத போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பாவம் கல்யாணம் ஆகாத அனுஷ்காவை இப்படி அம்மாவாக்கி விட்டீர்கள்.
  ஸ்ரீராம் கோபித்து கொள்ள போகிறார்.

  ReplyDelete
 9. அட, லிவிங்க் டுகெதெர் வேறு வழியிலா.
  ஹாஹா. எழுதிட்டாப் போச்சு.
  மாமியார் இவ்வளவு அழகா.

  ReplyDelete
 10. வேற பேரு வைங்கப்பா.

  ReplyDelete
 11. சந்தோஷ் சுப்ரமணியன் மாதிரி இருக்கே!...

  ReplyDelete
 12. த்ரிஷாவுக்காக
  ஜெயம் ரவி - எருமைச் சாணி கூட அள்ளுவாரே! - அந்த மாதிரியா!?..

  அடக் கஷ்டமே!..

  ReplyDelete