சனி, 16 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள்16:: ஆண்டொன்று போனால் .... !


அசோக் லேலண்டில் நவம்பர் மாதம் வந்ததுமே தொழிலகத்தில் குறிப்பாக எங்கள் இன்ஜினியரிங் பகுதியில் ஓர் எதிர்பார்ப்பு கலந்த, ஆர்வத்துடன் கூடிய, சிறிய பரபரப்பு பற்றிக் கொள்ளும்.

நிர்வாகத்தினர், அடுத்த ஆண்டுக்கான பன்னிரண்டு நாட்கள் பண்டிகை விடுமுறை நாட்கள் என்னென்ன என்று ஒரு வரைவு சுற்றறிக்கை அனுப்புவார்கள். எல்லா பகுதி அறிவிப்புப் பலகையிலும் அந்த அறிவிப்புத் தாள் ஒட்டப்படும்.

வெள்ளி, 15 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 15:: அஞ்சு பீரியட்!


பள்ளிக்கூட நாட்களில், சில உள்ளூர் விசேஷங்களுக்கும், கார்த்திகை தீபம் போன்ற மாலை நேர விழாக்களுக்கும், அஞ்சு பீரியட் பள்ளிக்கூட வகுப்புகள் நடக்கும். பிறகு எல்லோரும் 'வீட்டுக்கு பெல்' அடித்தவுடன், வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளாக வீட்டை நோக்கி சந்தோஷமாக ஓடுவோம்.


வியாழன், 14 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 14 :: தீபாவளி நாட்கள்.முன் காலத்தில், ஆனந்தவிகடன் தீபாவளி மலர் வந்தவுடன், நானும் என்னுடைய அண்ணனும் முதலில் படிப்பது, அதில் சிறுவர் கதைப் பகுதியில் வருகின்ற 'காட்டிலே தீபாவளி' அல்லது 'கரடியார் வெடித்த கேப்பு' அல்லது 'கபீஷ் கொளுத்திய கம்பி மத்தாப்பூ' போன்ற கதைகளைத்தான்! (எழுதியவர் வாண்டு மாமா? ராஜி?) இங்கே அசோக் லேலண்டு தீபாவளி! - கதையல்ல நிஜம்!


புதன், 13 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 13:: அ லே க் ஆயுத பூஜை!வாசக நண்பர்கள், நான் இங்கு பதிவது, நாற்பது வருடங்களுக்கு முந்தைய அனுபவங்களை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காலப் போக்கில் எவ்வளவோ மாற்றங்கள். இக்காலத்தில், அசோக் லேலண்டில் எவ்வளவோ மாற்றங்கள். நான் அன்றைய சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வதைப் படிப்பவர்கள், இன்றும் அதே நிலைமை அங்கு இருக்கின்றது என்று தப்புக் கணக்குப் போடவேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.


*** ***

செவ்வாய், 12 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 12:: அசோக் 'பில்லர் டு போஸ்ட்! '


உதவியாளர் உள்ளே வந்தார்.

முதலில், 'கையது கொண்டு, மெய்யது போர்த்தி' நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்தார். பிறகு, டாக்டரைப் பார்த்து, பார்வையாலேயே 'என்ன?' என்று கேட்டார்.


திங்கள், 11 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 11 :: மருத்துவப் பரிசோதனை.டிசம்பர் இரண்டாம் தேதி, ஆண்டு 1971. அவர்கள் கேட்டிருந்தபடி, எல்லா சான்றிதழ்களும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். புறப்படுவதற்கு முன்பு, என்னுடைய எக்ஸ்-ரே யை, ஒரு புதிய மஞ்சள் நிற காகித கவரில் போட்டு, ரிப்போர்ட் இருந்த கவரை வீட்டிலேயே விட்டு, கிளம்பினேன்.
மருத்துவப் பரிசோதனைக்கு மொத்தம் ஐந்து பேர் வந்திருந்தனர். கௌதமன், பாஸ்கர், அனந்தராமன், விஸ்வநாதம் (ஆமாம் - தம் தான்) ஷ்யாம் சுந்தர் ரெட்டி - என்று ஞாபகம். ஐந்தாவது நபர் சரியாக ஞாபகம் இல்லை.


ஞாயிறு, 10 மார்ச், 2019

அலேக் அனுபவங்கள் 10 :: லஞ்ச எதிர்ப்பு!இது அசோக் லேலண்டு அனுபவம் இல்லை என்றாலும், அசோக் லேலண்டில் சேருவதற்காக, எனக்கு ஏற்பட்ட அனுபவம் என்ற வகையில் பகிர்கின்றேன்.